குடிநீர் பிரச்னை தீர்க்க சாய் பாபாவிடம் ரோசய்யா கோரிக்கை
குடிநீர் பிரச்னை தீர்க்க சாய் பாபாவிடம் ரோசய்யா கோரிக்கை
குடிநீர் பிரச்னை தீர்க்க சாய் பாபாவிடம் ரோசய்யா கோரிக்கை
ADDED : ஜூன் 02, 2010 03:20 AM
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவிடம் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆசி பெற்றார்.
ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று முன்தினம் புட்டபர்த்தி சாய் பாபா ஆசிரமத்திற்கு வந்த ரோசய்யா, அங்குள்ள சாய் குல்வந்த் வளாகத்தில் சத்யசாய் பாபாவை தரிசனம் செய்தார். ஆசிரமத்தில் 30 நிமிடங்கள் தங்கியிருந்த ரோசய்யாவை, பாபா ஆசீர்வதித்தார். இருவரும் 10 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ரோசய்யா, ""ஆந்திர மாநிலத்தில் பல முக்கிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி சத்யசாய் பாபாவிற்கு கோரிக்கை விடுத்தேன்,'' என தெரிவித்தார்.